இதையெல்லாம் மறந்து கூட ஃப்ரிட்ஜ்ஜில் வச்சிடாதீங்க.! ஸ்மார்ட்டா மெயிண்டெயின் பன்ன டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


சமையலில் அதிகம் பயன்படுவது மசாலா பொருட்களை விட காய்கறிகள் தான். இவற்றை முடிந்த அளவு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். 

தேவைக்கு அதிகமாக வாங்கி அதை பிரிட்ஜில் வைப்பதால் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும். ஃப்ரிட்ஜில் வைத்த காய்கறிகள் பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருக்கும். ஆனால், அதை நாம் உபயோகப்படுத்தும் போது அதில் உள்ள விட்டமின்ஸ், மினரல்ஸ் அனைத்தும் போதிய அளவு கிடைப்பதில்லை.

பிரிட்ஜில் வைக்கக்கூடாத காய்கறிகளில் ஒன்று தக்காளி தக்காளியை வெளியே காற்றோட்டமாக ஒரு கூடையில் போட்டு வைத்தாலே போதும்.

பிரட் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடியது. மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் விரும்பி உண்பர். இதை பிரிட்ஜில் வைப்பதால் இறுகி விடும். பிரட்டை காற்று புகாதவாறு டப்பாவில் போட்டு வைத்தாலே போதும்.

அடுத்து வாழைப்பழம் இதையும் ஃப்ரிஜ்ஜில் வைக்க கூடாது. இது போதுமான அறை வெப்ப நிலையில் வைத்தாலே கெட்டுப் போகாமல் இருக்கும். மேலும் வாழைப்பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு அதை கயிற்றில் கட்டி தொங்கவிட வேண்டும். அவ்வாறு வைத்து நாம் உபயோகப்படுத்தும் போது நீண்ட நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

அடுத்து, தேன் இது இயற்கையிலேயே நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைப்பதால் தேன் கட்டி ஆகிவிடும். இதை தேனை கண்ணாடி குடுவையில் வைத்து அதிகம் வெளிச்சம் படாதவாறு வைத்தாலே போதும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do Not Put These Items In Fridge 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->