சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக்கூடாது? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக்கூடாது?

பொதுவாக முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுவோம். ஆனால் சோப்பை முகத்திற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. மேலும் குளிக்கும்போது தவிர, மற்ற நேரங்களில் சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சரும வகைக்கு ஏற்ப ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம். 

உடலை சுத்தப்படுத்த பயன்படும் சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. அதனால் தான் சோப்புகளில் நுரை அதிகம் வருகிறது. மேலும் எந்த சோப்புகளில் நுரை அதிகம் வருகிறதோ அவற்றில் கெமிக்கல் அளவுக்கு அதிகமாக உள்ளது. கெமிக்கல் இருக்கும் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலும் வெளியேறி, சருமம் அதிகம் வறட்சியடையும். மேலும் சிலருக்கு குளித்த பின் சருமம் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமும் இதுவே தான் ஆகும்.

சோப்புகளை பயன்படுத்தும்போது கெட்ட பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. நல்ல பாக்டீரியாக்கள் நம் சருமத்தில் இருந்தால் தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சோப்புகளை முகத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தும்போது சருமத்திற்கு பாதுகாப்பு தரும் அடுக்கு அழிக்கப்பட்டு, சருமத்தினுள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நுழைந்து பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சோப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அதிகப்படியான சருமம் வறட்சியின் காரணமாக சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை பெறக்கூடும். சில நேரங்களில் சோப்புகளும் முகப்பரு வருவதற்கு காரணமாக விளங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why do not use soap in face


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->