சுவையான 'காளான் குழம்பு' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சுவையான பாரம்பரிய முறையில் காளான் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
காளான் 
சின்ன வெங்காயம்
தக்காளி 
தனியா தூள் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு விழுது 
சோம்பு, சீரகம் 
பட்டை, கிராம்பு 
தேங்காய் துருவல் 
கடுகு 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு விழுது, மிளகு, சோம்பு சீரகம், பட்டை, கிராம்பு சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். 

குழம்பு நன்றாக கொதித்ததும் காளானை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். காளான் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் குழம்பு தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mushroom gravy recipe in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->