பலாப்பழத்தில் அப்பமா? இது என்ன புது டிஷ் - வாங்க பார்ப்போம்.! - Seithipunal
Seithipunal


பலாப்பழத்தில் அப்பமா? இது என்ன புது டிஷ் - வாங்க பார்ப்போம்.!

முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். பலாப்பழம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எச்சில் ஊறும். இந்தப் பலாப்பழத்தை வைத்து அப்பம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

பலாப்பழ சுளைகள் 
பச்சரிசி 
வெல்லம்
ஏலக்காய்
தேங்காய்
வெந்தயம்

செய்முறை:-

முதலில் பலாப்பழ சுளைகளை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்த அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் சேர்த்து அரைப்பதம் அரைந்தவுடன் அதில், தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, அரைத்து வைத்துள்ள பலாப்பழம், வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து வழித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி தூவி நன்றாக இட்லி மாவுப்பதத்துக்கு கலந்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, இட்லி தட்டில் அதன் குழிகளின் அளவுக்கு ஏற்ப வாழை இலையை நறுக்கி, இந்த மாவை அதில் இட்லி போல் ஊற்றி வெந்தவுடன் எடுத்தாள் சுவையான பலாப்பழம் அப்பம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jack fruit appam recipe


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->