தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைய காரணம் என்ன?.. விளைவுகள், தீர்வுகள் என்ன?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்திய விருப்பம் என்பது தம்பதியின் மனநிலையை பொறுத்து அமையும். இது சரிவர நிறைவேறாத பட்சத்தில், இனம்புரியாத கோபம் ஏற்படும். இந்த விஷயத்தை பொறுத்த வரையில் கணவன் - மனைவிக்கு ஆர்வமில்லாத பட்சத்தில், இதற்கான காரணத்தை சரிவர எடுத்துரைத்து புரிய வைத்தல் அவசியமான ஒன்றாகும். சிலருக்கு உடல் நலமின்மை, அலுவலக பணிப்பளு, மனதளவில் ஏற்பட்டுள்ள அழுத்தம் போன்ற பல காரணத்தால் தாம்பத்திய ஆர்வம் குறையும்.

இவ்வாறாக பல காரணங்கள் இருந்தாலும், தம்பதிகள் தங்களுக்குள் தாம்பத்தியம் என்ற விஷயத்தில் சரிவர இருக்காத பட்சத்தில், இது தம்பதிகளின் பிரிவிற்கும் வழிவகை செய்யும். தம்பதிகளின் தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மனஉளைச்சல், குற்றம் கண்டறிதல் என்று பிரச்சனை மெல்ல மெல்ல விரிவடைந்து செல்லும். சிறிய பிரச்சனையில் துவங்கி, தம்பதிகளின் பிரிவிற்கு முக்கிய மறைமுக காரணமாக தாம்பத்திய விலக்கம் இருக்கும். 

இதனைப்போன்று இன்றுள்ள பெரிய பிரச்சனையாக திருமணம் கடந்த உறவு போன்றவைக்கும் வழிவகை செய்யும். தம்பதிகளுக்கு இடையே தாம்பத்திய ஆசையை வெளிப்படுத்த தயங்கும் செயல்கள் கூட திருமணம் கடந்த உறவை ஏற்படுத்தும். தினமும் வீட்டில் பெற்றோர்கள் சண்டையிட்டு வரும் நிலையில், அது திருமண உறவு தொடர்பான பல விபரீத கருத்துக்களை பிள்ளைகளின் மீது திணிக்கும். இதனால் பிள்ளைகள் திருமணம் என்றாலே பிரச்சனை என்று எண்ணவும் வாய்ப்புகள் அதிகம். 

இதுபோன்ற பிரச்சனைகளை "Sexual Adjustment Problem" என்று கூறுவார்கள். சிறிய அளவிலான பிரச்சனை, தாம்பத்திய திருப்தியின்மை காரணமாக தாம்பத்தியமும் பாதித்து, வாழ்க்கையையும் பாதிக்கிறது. தம்பதிகள் தங்களுக்குள் மனம்விட்டு பேசிக்கொள்ளுதல், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழுதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பிற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை அல்லது பரிசோதனை மேற்கொண்டு சரி செய்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும்.

எந்த நேரமும் கணவனோ அல்லது மனைவியோ சண்டையிட்டுக்கொண்டு இருந்துவிட்டு, இரவு வேளைகளில் தாம்பத்திய உணர்வுகளை ஏற்படுத்தி படுக்கை உல்லாசத்திற்கு அழைத்தால் அது மிகையாகாது. கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பும், கொஞ்சல் இருக்க வேண்டிய இடத்தில் கொஞ்சலும் இருக்க வேண்டும். அவ்வப்போது செல்ல முத்தங்களும், கட்டிப்பிடி வைத்தியமும் பெரும் உதவி செய்யும். 

ஒருவருக்கொருவர் தங்களின் தாம்பத்தியம் குறித்த விஷயங்களையும், தங்களின் விருப்பத்தையும் கூறி தாம்பத்தியத்தை செயல்படுத்தலாம். இருவரும் இன்பமாக கூடி, உல்லாசமாக இருந்தால் மட்டுமே பல நன்மைகள் ஏற்படும். மாறாக இருபலராறில் யாரேனும் பெயருக்கு தாம்பத்தியம் மேற்கொண்டால் பின்வரும் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும். மனம்விட்டு பேசி இல்லறத்தில் நல்லறம் புகுத்திடுங்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to sacrifice wife or Husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->