சுவையான வெங்காய சட்னி செய்வது எப்படி?.! - Seithipunal
Seithipunal


சின்ன வெங்காயம் அல்லது நாட்டு வெங்காயம் என்று அழைக்கப்படும் வெங்காயம் சிறுகுடல் பாதையை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இது ஜீரணத்திற்கும் உதவி செய்கிறது. இதனை வைத்து இட்லி மற்றும் தோசைக்கு சாப்பிடும் சுவையான சட்னி செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 கரண்டி,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 5,
பூண்டு - 6 பற்கள்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
புளிச்சாறு - 1 குழம்பு கரண்டியளவு,

தாளிப்பதற்க்கு..

எண்ணெய் - 2 கரண்டி,
கடுகு - 1 கரண்டி,
உளுத்தம் பருப்பு - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, அடுப்பில் எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். 

இவை அனைத்தையும் எடுத்து வைத்து நன்கு ஆறியதும், இதனுடன் புளிச்சாறு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து, வானெலியில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அதில் சட்னி கலவையை ஊற்றி லேசான சூடு வந்ததும் இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி தயார். 

குறிப்பு: வெங்காயம் கட்டாயம் நன்கு வதங்கியிருக்க வேண்டும். இல்லையேல் பச்சையாக இருக்கும் சமயத்தில் அவை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது.

மிளகாய் வற்றல் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வற்றலை சேர்த்துக்கொள்ளலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Vengaya Satni or Onion Satni Home 16 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->