சத்து நிறைந்த சுவையான கேரட் பீட்ரூட் அல்வா! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியம் நிறைந்த கேரட் பீட்ரூட் அல்வா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1

கேரட் - 2

பால் - 1/4 கப்

கண்டென்ஸ்டுமில்க் - 3 டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

ஏலக்காய் - 4

உலர்ந்த திராட்சை - 6

சர்க்கரை - 1 1/2 கப்

பாதாம் -5

முந்திரி - 5

செய்முறை:

முதலில் கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பின்பு துருவிய பீட்ரூட், கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி வேக வைக்கவும்.

நன்கு வெந்ததும், ஏலக்காய் பொடி, பாதாம், வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். அவ்வளவுதாங்க சுவையான ஆரோக்கியமுள்ள கேரட் பீட்ரூட் அல்வா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Carrot beetroot halwa


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->