ஹோட்டல் ஸ்டைல் பூண்டு இட்லி பொடி..! ஒரே ஒரு டிப்பில் மணம் இரட்டிப்பு ரகசியம் இதோ...! - Seithipunal
Seithipunal


இட்லி, தோசைக்கு சுவை கூட்டும் முக்கிய துணை உணவு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது இட்லி பொடி தான். அதிலும் பூண்டின் கமகமக்கும் மணம் கலந்த பூண்டு இட்லி பொடி இருந்தால், சாப்பிடும் ஆர்வம் இரட்டிப்பாகும். வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த ருசியான பூண்டு இட்லி பொடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முழு பூண்டு (3), வரமிளகாய் (7), கடலைப்பருப்பு (1 டேபிள் ஸ்பூன்), உளுத்தம் பருப்பு (1 டேபிள் ஸ்பூன்), வரமல்லி (1 டேபிள் ஸ்பூன்), புளி (சிறிய துண்டு), கட்டிப் பெருங்காயம் (சிறிதளவு), உப்பு, எண்ணெய்


செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தோலுடன் உள்ள பூண்டுகளை லேசாக நசுக்கி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் வரமிளகாய்களை வறுத்து தனியாக எடுக்கவும். பின்னர் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமல்லி சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் சிறிதளவு புளியையும் சேர்த்து வறுத்தால் சுவை அதிகரிக்கும்.பருப்பு அளவு மிக முக்கியம். அதிகமாக சேர்த்தால் பூண்டு சுவை குறைந்து சாதாரண பொடி சுவையாக மாறிவிடும். இறுதியாக கட்டிப் பெருங்காயம் சேர்த்து லேசாக வறுக்கவும்.அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். மிக நைஸாக அரைக்காமல் இருப்பதே இந்த பொடியின் சிறப்பு.இப்போது கமகமக்கும் பூண்டு இட்லி பொடி தயார்! இதை சூடான இட்லி, தோசை அல்லது ஊத்தப்பத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை மறக்க முடியாததாக இருக்கும்.
சிறப்பு டிப்:
பூண்டு மணம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டுமா? மற்ற பொருட்களை அரைத்த பிறகு, வறுத்த பூண்டை இறுதியில் சேர்த்து மிக்ஸியில் ஒரே ஒரு “pulse” மட்டும் கொடுக்கவும். இதனால் பூண்டின் நறுமணம் நீண்ட நேரம் மாறாமல் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hotel Style Garlic Idli Powder Here secret double flavor just one dip


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->