இந்த ஒரு பொருள் மட்டும் போதும் உங்கள் சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முகத்தில் பருக்கள், தழும்புகள், வடுக்கள், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும். அவை இல்லாத சருமம் பெற பல வழிமுறைகளை பின்பற்றுவர். இவற்றை சரிசெய்ய வீட்டில் இருக்கும் தேன் நமக்கு உதவும். தேனில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால், தேன் சருமத்தை சிறப்பான முறையில் பராமரிக்கிறது.

தக்காளி மற்றும் தேனை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 10 நிகிடங்கள் கழித்து கழுவி வர சருமதுளைகளை சுருக்கிமுகப்பரு, கருமை மற்றும் வறண்ட சருமத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

ஒரு துளி தேனுடன் மசிக்கப்பட்ட கிவி பழம் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓட்ஸை நன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின், அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர முகம் பளிச்சென மாறுவதுடன்  முகத்தில் உள்ள கருமையை நீக்க உதவும்.

மசித்த பப்பாளி பழத்துடன் 1-2 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ளவும். அதனை முகத்தில் தடவி  20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சருமத்திற்கு உடனடியாக பொலிவை தரும்.

சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் காணப்படும் அவர்கள் எல்லாம் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பச்சை தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர சரும சுருக்கங்கள் மறைவதுடன் இளமையான தோற்றம் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honey for Skin care


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->