சத்தான சுவைமிகுந்த சம்பா ரவை கிச்சடி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சத்தான சுவை மிகுந்த சம்பா ரவை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சம்பா ரவை - 1 கப்

வெங்காயம் -1

கேரட் - 1 

குடமிளகாய் (நறுக்கியது) -1கப்

பச்சைப் பட்டாணி - 1 கப்

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி

கறிவேப்பிலை 

எண்ணெய்

உப்பு 

செய்முறை:

முதலில் சம்பா ரவையை கடாயில் சிவக்க வறுக்கவும். பின்பு வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பிறகு கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணியை போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்பு தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும்.

பின்பு 10 நிமிடம் கழித்து கிளறி வறுத்த முந்திரி இறக்கினால் சத்தான சுவை மிகுந்த சம்பா ரவை கிச்சடி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Tasty Samba rava kichchadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->