கோடை வெயிலுக்கு சத்து நிறைந்த "கேரட் பப்பாளி ஜூஸ்".! - Seithipunal
Seithipunal


சத்து நிறைந்த சுவையான கேரட்-பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கேரட் - 1 

சிறிய பப்பாளி பழம் - 1 

இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

தேன் - சுவைக்கேற்ப

ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பப்பாளி பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு நறுக்கிய பப்பாளி, கேரட், இஞ்சி, தேவையான அளவு தண்ணீர், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்தால் சுவையான கேரட், பப்பாளி ஜூஸ் ரெடி. மேலும் விருப்பமுள்ளவர்கள், பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து குடிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Carrot papaya juice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->