சப்பாத்தி முதல் சாதம் வரை அனைத்திற்கும் சூப்பரான குருமா ரெசிபி...!! - Seithipunal
Seithipunal


சப்பாத்தி தோசைக்கு தினமும் ஒரே மாதிரியான குருமா செய்து கொடுக்காமல் சற்று வித்யாசமாக பச்சை பயிறில் எப்படி குருமா செய்வது என பார்போம்.

தேவையானவை:

பச்சை பயிறு  - 1/2 கப்

வெங்காயம் - 1
தக்காளி     - 1
மிளகாய்     - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை  பொடியாக  நறுக்கி கொள்ளவும். பின்னர் தனியே குக்கரில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு அவித்துக் கொள்ள வேண்டும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் அவித்ததைப் கொட்டி உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். சுவையான பச்சைபயிறு குருமா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gram Green Kuruma Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->