அசைவ பிரியர்களுக்காக சூப்பரான மட்டன் நெய் ரோஸ்ட்..!! - Seithipunal
Seithipunal


ஆட்டுகறியை வைத்து சுவையான பல உணவுகள் செய்யலாம். குழம்பு, வறுவல் என பல ரெசிபிகளை தொடர்ந்து மட்டன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4-5
பட்டை - 1
மிளகு - 10
கடுகு - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி விதைகள் -  1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு (தேவையான அளவு)

செய்முறை:

மட்டனை நன்றாக கழுவி கொள்ளவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றவும் இதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மட்டன், இஞ்சி, பூண்டு பேஸட் ஆகியவை சேர்த்து, மட்டன் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு குக்கரினை மூடி போட்டு மூடி விட்டு, 4 விசில் வரும் வரை காத்திருக்கவும். தற்போது நன்கு வெந்துள்ள மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிவப்பு மிளகாய், மல்லி விதைகள், கிராம்பு பட்டை, கடுகு போட்டு பொரித்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்,

தற்போது தற்போது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில், வேக வைத்த மட்டன் துண்டுகள், பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பின் தீயை குறைத்து வைத்து வறுத்து எடுத்தால் சுவையான மட்டன் நெய் ரோஸ்ட்ப் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ghee Mutton Roast Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->