#மகளிர் கார்னர் || மாதவிடாய் காலத்தில் இந்த தவற்றையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்..! - Seithipunal
Seithipunal


பெண்களின் ஆரோக்கியத்தில் மாதவிடாய் சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே மாதவிடாய் காலத்தில் சீராக இருக்க வேண்டும் என அவசியம். மாதவிடாய் காலத்தில் இந்த தவற்றை செய்யகூடாது. அவை என்னென்ன என பார்போம்.

சானிடரி பேடுகளை மாற்றாமல் இருப்பது:

மாதவிடாய் காலத்தில் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிடரி நாப்கின் மாற்ற வேண்டும். ரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றுவது அவசியம்.

வாக்சிங் செய்வது:

மாதவிடாய் காலங்களில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு இருக்கும் அதனால், வாக்சிங்க் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நறுமண பொருட்களை பயன்படுத்துவது:

மாதவிடாயின் போது ரத்தபோக்கின் துர்நாற்றத்தை தவிர்க்க பலரும் வாசனை பொருட்களை பயன்படுத்துவார்கள் அப்படி பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள கெமிக்கல்கள் பிறப்புறுப்பில் உள்ள சென்சிட்டிவ் பகுதிகளை பாதிக்கும். அதனால், அவற்றை தவிர்க்க வேண்டும்.

தூக்கம்:

மன நிலையில் அடக்கடி மாற்றங்கள், எரிச்சல், கோபம் ஆகியவை பொதுவாக மாதவிடாய் காலத்தில் இருக்கும் அதனை தவிர்க்க நல்ல தூக்கம் அவசியமாகிறது.

காப்பி குடிப்பது:

சிலர் மாதவிடாய் காலத்தில் வலியை குறைப்பதற்காக காப்பி அருந்துவர். ஆனால், காஃபீன் உடலின் நீர்ச்சத்தை குறைப்பதோடு, பீரியட்ஸ் வலியையும் அதிகரிக்கிறது.இதனால், காப்பியை தவிர்ப்பது அவசியமாகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't do this things in Periods


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->