நன்மைகளை அள்ளி தரும் அவகேடோ... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..! - Seithipunal
Seithipunal


பட்டர் ஃபுரூட்  என அழைக்கப்படும் அவகேடா பழத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்த பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன.

அவகேடா பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். நார்ச்த்து மிக்கது, மேலும், அவகேடா பழத்தில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவ்வளவு நன்மைகள் கொண்ட அவகேடா பழத்தில் சுவையான டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை:

கோதுமை பிரெட் - 2,

பழுத்த அவகேடோ - ஒன்று,
வெங்காயத்தாள் - ஒன்று  
பச்சை மிளகாய் - ஒன்று,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, ஆகியவற்றை  பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அவகேடோ, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.

பிரெட்டின் மீது வெண்ணெய்தடவி தோசைக்கல் காய்ந்ததும், பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த கலவையைத் தடவிப் பரிமாறவும். சுவையான டோஸ்ட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benifits Of Avocoda


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->