சத்தான பீட்ரூட் வடை.! சுவையான ஸ்னாக்ஸ்..! - Seithipunal
Seithipunal


உங்கள் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான பீட்ரூட் வடையை செய்து கொடுங்கள். அதற்கான செய்முறையை காணலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
சோம்பு - 1/2 ஸ்பூன் 
கல் உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பீட்ருட் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்யும் முறை :

வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய

வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beetroot vadai recipe preparation in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->