வழுவழுப்பான முக அழகை பெற.. எளிமையான டிப்ஸ். ! - Seithipunal
Seithipunal


திராட்சைச் சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்தில் அப்ளை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் நீங்கும்.

வாழைப்பழத்தோலை ஒட்டியிருக்கும் சதைப்பகுதியுடன், 10 சொட்டு கிளிசரின், கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து தோலை அப்படியே முகத்தில் வைத்து தடவி 5 முதல் 10 நிமிடம் வைத்து பேஷியல் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, நிறம் கூடும். 

பன்னீர் திராட்சையை விதையோடு நன்கு அரைத்து, 2 நாட்கள் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து பின் அதில் படிந்திருக்கும் மெல்லிய வெள்ளை ஏடினை கலக்கி ஃபிரிட்ஜில் வைத்து, பின் அதனை பஞ்சினால் எடுத்து முகம், கழுத்துப்பகுதிகளில் தடவி 10 நிமிடம் வைத்துவிட்டு, தண்ணீரால் முகத்தை கழுவ வந்தால், வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கும். 

அவகடோவுடன் வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், தோலின் வறட்சி குறைத்து முதுமை ஏற்படுவது குறையும். 

ஸ்ட்ராபெர்ரியுடன் தேன், மக்காச்சோள மாவு கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். தர்ப்பூசணி பழ சாறு, சாத்துக்குடி சாறு, ஜவ்வரிசி மாவு மூன்றையும் கலந்து முகம் கழுத்திற்கு தடவி வந்தால், பளபளப்பு கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beauty tips for glowing skin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->