பொதுமக்களே உஷார் : கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பரவல்.. 5 வயது சிறுமி பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர் தெரிவிக்கையில், மாநிலத்தில் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால், எந்தவிதமான அச்சமும், பதற்றமும் தேவையில்லை.

ஜிகா வைரஸ் தொற்று நோயானது டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் நோய்த்தொற்றுடைய ஏடிஸ் கொசுவின் மூலம் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947 இல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

மேலும், மாநிலத்தில் இதுவரை புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், அதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும், நிலைமையை அரசு எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zika Virus spread in Karnataka 5 years old girl affected


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->