உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய புள்ளிக்கு ஆப்பு! - Seithipunal
Seithipunal


இந்து மத உணர்வுகளை சீர்குலைத்ததாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே மீது, உத்திரபிரதேச மாநிலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், உதயநிதிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உதயநிதி மீதும், பிரியங்க் கார்கே மீதும் உத்திரபிரதேச மாநிலம்,உள்ள ராம்பூரில் உள்ள சிவில் சர்வீஸ் காவல் நிலையத்தில், வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A (வேண்டுமென்றே திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்களை செய்தல்), பிரிவு 153 A (இரண்டு மத குழுக்களுக்கு இடையில் வேண்டுமென்றே பகையைத் தூண்டுதல்) ஆகியவைகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

முன்னதாக உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று, முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YP Police case file against Udhayanidhi and Karke


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->