குளியலறையில் ரகசிய கேமரா - வாலிபரை வெளுத்தெடுத்த விடுதி மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள, கலபுரகி மாவட்டம் சாந்தநகரில் சிறுபான்மையினர் மாணவி விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவியின் நண்பரான சலீம் என்பவர் விடுதிக்கு அடிக்கடி சென்று வருவார்.

இந்த நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் குளியலறைக்கு குளிப்பதற்காகச் சென்றபோது அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைப் பார்த்து அதிர்சியில் சத்தம் போட்டுள்ளார். இதைக் கேட்டு மற்ற மாணவிகள் ஓடி வந்து சலீமை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மக்கள் விரைந்து வந்து சலீமை விடுவித்தனர். இதையடுத்து, சலீம் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், சம்பவம் குறித்து தாசில்தார் மற்றும் போலீஸாருக்குத் தகல் தெரிவித்தனர். அதன் படி அஙகு வந்த போலீஸார், குளியலறையில் இருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இன்று சலீமை கைது செய்தனர். அவரிடம் போலீசால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for fit camera in hostel bathroom


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->