'பொண்ணு கொடுங்க சாமி': 160 கிலோ மீட்டர் பாத யாத்திரை சென்ற இளைஞர்கள்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, கோடஹள்ளி கிராமத்தில் விவசாயம் செய்யும் வாலிபர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை எனவும் விவசாயி என்பதால் பெண் வீட்டார் பெண் கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கோடஹள்ளி கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டும் என கிராமத்தில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். 

இவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்க வேண்டும் எனவும் நல்ல மழை பொழிய வேண்டும் என வேண்டியும் பாதையாத்திரை செல்வதாக தெரிவித்தனர். 

சில மாதங்களுக்கு முன்பு இதுபோல் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மாதேஸ்வர கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young men went padayatra temple get woman for marriage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->