#அதிர்ச்சி: கொரோனா அறிகுறியுடன் இறந்து போன பெண்மணி.! பைக்கில் பிணத்தை கொண்டு சென்ற உறவினர்கள்.!  
                                    
                                    
                                   Women dead body took by bike who get Corona Symptoms
 
                                 
                               
                                
                                      
                                            ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தினை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். அதன் காரணமாக அந்த பகுதியிலுள்ள தனியார் மருத்தவமனைக்கு அவரது மகன் அவரை அழைத்து சென்றார். 
மேலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், சோதனையின் முடிவு வரும்வரை காத்திருப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால், பரிசோதனை முடிவு வரும் முன்னரே அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தன் தாயின் உடலை கொண்டு செல்வதற்காக மருத்துவ ஊர்தி ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மருத்துவமனை முன் அமர்ந்திருந்தனர்.
ஆனால், மருத்துவ ஊர்தி எதுவும் கிடைக்காததால், உயிரிழந்த பெண்ணின் மகனும், மருமகனும் இருசக்கர வாகனத்திலேயே அவரை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Women dead body took by bike who get Corona Symptoms