அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்: மருத்துவமனையில் சிகிச்சை! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் ரேஷன் ஊழல் குறித்து சோதனை மேற்கொள்ள சென்று அமலாக்கத்துறை அதிகாரி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் ரேஷன் ஊழல் நடப்பதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்துவதற்காக சென்றனர். 

சண்டேஷ்காலி பகுதி அருகே அமலாக்கத்துறையினர் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளையும் ராணுவ படை வீரர்களையும் சுற்றி வளைத்து தாக்கி விரட்டினர். 

மேலும் அவர்கள் சென்ற கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதில் சில அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal enforcement directorate attacked during raid


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->