அடுத்த அதிர்ச்சி வைரஸால் பலி.. நாய்களை குறிவைக்கும் புதிய வைரஸ்.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் நாய்களுக்கிடையே புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது  இந்த தொற்றினால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

கொல்லம் பகுதியில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேலான தெருநாய்கள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், அங்கு கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான தெருநாய்கள் அதிக அளவில் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் தெருநாய்களுக்கு இடையில் பரவும் கேனான் டி வைரஸ் என்று கூறப்படும் வைரஸ் தான்.

இந்த பாதிப்புக்கு உள்ளான நாய்களிடம் இருந்து மற்ற நாய்களுக்கு நோய் பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று கூறப்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பதால் நாய்களின் மூளை பாதிப்புக்கு உள்ளாகும் ரேபிஸ் நோய் போன்ற அறிகுறியை இது வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virus spread In kollam Kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->