ஆய்வில் அதிர்ச்சி - டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபட்ட கிராம மக்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் பட்லியா கிராமத்தைச் சேர்ந்த வெஸ்டா மண்டலோய் என்பவர் உருண்டையான ஒரு பொருளை தனது முன்னோர்களின் வழியில் குலதெய்வமாக வணங்கி வந்தார். அதனை ககர் பைரவ் என்று அழைத்து வருகின்றனர். 

இந்தப் பொருளை வணங்குவதன் மூலம் விவசாய நிலங்களை, கால்நடைகளை பிரச்சினைகளில் இருந்தும், துரதிர்ஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும் என்பது அவரது முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. அதனையே, மண்டலோயும் கடைபிடித்து வருகிறார். 

இவரைப் போலவே தார் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தோண்டும் போது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் உருண்டையை அப்பகுதி மக்கள் குலதெய்வங்களாக கருதி வணங்கி வருகின்றனர். இந்த நிலையில், லக்னோவின் பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை நடத்தினர். 

அந்த ஆய்வின் போது தார் பகுதி மக்கள் தெய்வமாக வணங்கும் பந்து போன்ற உருவம் டைனோசர்களின் முட்டை என்பது தெரியவந்தது. இந்த முட்டை டைட்டானோசொரஸ் இனத்தை சேர்ந்தவை ஆகும். இத்தனை நாட்களாக டைனோசர்களின் முட்டையையா வணங்கி வந்தோம்? என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் சொல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

village peoples worship dinosaur egg in madhya pradhesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->