"இந்த திட்டு திட்டிகிறாங்க", மெட்ரோ ரயிலில் 'பெப்பர் ஸ்ப்ரே'யுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் பெண்கள்.! வீடியோ உள்ளே.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில்  இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது. அடிக்கடி சமூக வலைதளங்களில் இது போன்ற வினோதமான வீடியோக்கள் டிரெண்டிங்காகி வருகின்றன.

இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை பாஜகவை சார்ந்த தஜிந்தர் பால் சிங் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை  லோக்கல் ட்ரெயினில் இருக்கைக்காக ஒரு ஆண் மற்றும் பெண்ணிற்கிடையே நடைபெற்ற கடுமையான வாக்குவாதம்  வைரலாக இருந்தது. தற்போது டெல்லி மெட்ரோ ரயிலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் வைரலாக இருக்கிறது.

இந்த காணொளியில் அவரது அருகில் அமர்ந்திருக்கும் இரண்டு பெண்கள்  கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பெண் ஒருவர் தான் பையில் வைத்திருந்த  பெப்பர் ஸ்ப்ரே எடுத்து இன்னொரு பெண்ணின் முகத்தில் அடிக்க முயல்கிறார். அந்தப் பெண்மணி அதனை தடுக்கிறார். இந்த காணொளி காட்சிகள் தற்போது ட்ரெண்டிங்காகி இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video of two women fighting in delhi metro train went viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->