மீண்டும்... மீண்டுமா...!! நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் நான்காவது முறையாக நேற்று கால்நடை மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கும் இடையே பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த ரயில் நேற்று குஜராத் மாநிலம் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்றபோது குறுக்கே வந்த கால்நடையின் மீது மோதியது. இந்த விபத்தில் ரயிலின் முன் பக்கம் சேதம் அடைந்ததால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ரயில் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கால்நடைகள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் குஜராத் - மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் மூன்று முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VandeBharat train between Gujarat Mumbai has met accident in fourth time


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->