உத்திரபிரதேச பிரதேசத்தில் இந்தப் பகுதிகளில் மது விற்பனை தடை.. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


அயோத்தி மற்றும் மதுராவில் உள்ள கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறைக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து ராமர் கோவில் மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி யைச் சுற்றி உள்ள பகுதிகளில் மது விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மதுரா கோவிலை சுற்றி செயல்பட்டு வந்த 37 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிக அளவு பால் உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற மதுராவில் தொழில்துறை புதுப்பிக்கும் வகையில் வணிகர்கள் அங்கு பால் தொழிலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh bans sale of liquor in ayodhi and Madhura


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->