பேர் தான் சத்துணவு.. ஆனா உப்பும், வேக வைத்தும் சோறும் தான்.. அரசு பள்ளியின் அவலம்.!  - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியா பகுதியில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு வெறும் உப்பு மட்டுமே கலந்த சாதம் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

அந்த பள்ளியின் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ்  வழங்கப்படுகின்ற உணவு பட்டியல் பற்றிய மனுவில் தால், ரொட்டி, பால், அரிசி, காய்கறி ஆகியவை வழங்கப்படுவதாக எழுதப்பட்டு இருக்கின்றது.

ஆனால், அங்கிருக்கும் மாணவர்களுக்கு வெறும் உப்பும் வேக வைத்த அரிசியும் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக உணவு பொருட்கள் அனைத்தும் எங்கே எனும் கேள்வி எழுந்து இருக்கின்றது. 

இந்த விவகாரமானது மிகவும் பூதாகரமானதாக வெடித்துள்ள நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் நிதீஷ் குமார் மாணவர்களுக்கான உணவில் எந்த வித கவனக் குறைவு ஏற்பட்டாலும் நிச்சயம் சகித்துக் கொள்ளவே முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh ayodya school students food cheating


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->