கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பம்.! எச்சரிக்கை விடுத்த முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் தடுப்பு மருந்து விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் கொரோனாவை பொறுத்தவரை இரண்டாவது அலை விரைவில் பரவும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கின்றார். 

அதில்,"அறிகுறி எதுவும் இல்லாமலேயே வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இங்கிலாந்தை போலவே தற்போது தீவிரமாக பரவி வருவதாகவும், அவர் கூறியுள்ளார். நெறிமுறைகளைப் பின்பற்ற தவறிவிட்டனர். கட்டுப்பாடு இன்றி வீதியில் திரிகின்றனர் எனவே நிச்சயம் இரண்டாவது அலை ஏற்பட்டு வருகிறது." என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uthav thakkare speech about corona 2nd wave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->