மாநிலம் முழுவதும் வெடித்த போராட்டம்! இன்ஸ்பெக்டரை கொன்ற 5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசுவதைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், காவல் துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்கியதுடன், புறக்காவல் நிலையம் மற்றும் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் நிலவிவருகிறது.

மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் போராட்டம் நடத்தி உள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் தாக்கியதில் காவல் துறை தரப்பில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டரை கல்லால் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்ற 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் காவல் துறை 87 பேரை சேர்த்து உள்ளனர். இதில் 27 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 50 முதல் 60 பேர் வரை அடையாளம் தெரியாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆரில் பஜ்ரங்தளம் மூத்த தலைவர் யோகேஷ் ராஜ் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ.40 லட்சமும், சுமித் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் வழங்க உத்தர விட்டுள்ளார். 

English Summary

up protest is 2 police death in 5 people arrested


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal