எதிர்பார்ப்பை அதிகரிக்கும் இடைகால பட்ஜெட் தாக்கல்.! நடக்கப்போவது என்ன?
union minister nirmala seetharaman today budget 2024 presentation
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம், உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் திட்டங்களின் நன்மைகள், பயனாளிகள் விவரங்களை பட்டியலிட்டு பேசினார்.
இந்த நிலையில் கூட்டத் தொடரின் 2 -வது நாளான இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், சில மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் அவரால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட்டைத்தான் தாக்கல் செய்கிறார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற வரலாற்றை படைக்கவுள்ளார். இதற்கிடையே இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடப்பாண்டுக்கான பாராளுமன்ற லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஜன.,30ம் தேதி டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது.
ஆனால், இந்தக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக, அதிமுக, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
English Summary
union minister nirmala seetharaman today budget 2024 presentation