உஜ்ஜைனியில் உள்ள பிரபல திருக்கோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உஜ்ஜைனியில் உள்ள பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

மத்திய பிரதேசம் உஜ்ஜைனி மாவட்டத்தில் மகாகாளேஷ்வர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஜோதிர் லிங்கங்கள் ஒன்றாக அமைந்துள்ளது. 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தன் மனைவியுடன் இன்று காலை பஸ்ப ஆரத்தி பங்கேற்றார். இந்த கோவிலில் பஸ்ப ஆரத்தி என்பது புகழ்பெற்றதாகும். 

இது அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் கோவிலில் நந்தி மண்டபத்தில் நடைபெறும் பூஜை. 

ஆளுநர், பஸ்ப ஆரத்தி பூஜைக்கு பின்னர் தனது மனைவியுடன் கோவிலின் கருவறைக்குச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். 

பின்னர் தமிழக ஆளுநரை கோவில் நிர்வாக குழு சிறப்பாக வரவேற்று அவரை கௌரவித்து, சுவாமி மகா காளேஷ்வர் படத்தையும் பரிசாக வழங்கினர். 

பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இந்த கோவிலுக்கு அடிக்கடி வருகை தருவது வழக்கமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ujjain famous temple Tamil Nadu Governor worship 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->