வீடியோ கால் மூலம் மத்திய அமைச்சருக்கு மிரட்டல் - இரண்டு வாலிபர்கள் கைது.!! - Seithipunal
Seithipunal


வீடியோ கால் மூலம் மத்திய அமைச்சருக்கு மிரட்டல் - இரண்டு வாலிபர்கள் கைது.!!

கடந்த மாதம் மத்திய அமைச்சர் ஒருவரின் செல்போனுக்கு தெரியாத நபரின் எண்ணிலிருந்து வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அந்த வீடியோ காலை எடுத்தபோது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது. 

அதன்பின்னர் மர்ம நபர் ஒருவர் அமைச்சருக்கு போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மத்திய அமைச்சர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், மத்திய அமைச்சருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்களது பெயர் முகமது வகீல், முகமகது ஷாகிப் என்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போலீசார் ராஜஸ்தான் போலீசாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for threat to union minister


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->