கேரளாவில் 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் கூட்டத்தில், ஐந்து ஆண்டுகள் அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் அமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் அமைச்சராகவும் இருப்பது என்று முடிவெடுத்தனர்.

அதன் படி, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் எஸ் கட்சியின் அமைச்சராக அகமது தேவர்கோவில், காங்கிரஸ் பி கட்சி சார்பில் ஆண்டனி ராஜா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கடனப்பள்ளி, காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட இருவரும் வருகிற  29-ந்தேதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two new ministers inauguration in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->