லக்னோவில் கோமதி ஆற்றில் கார் விழுந்து விபத்து - 2 பேர் மாயம் - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ கோமதி ஆற்றில் கார் விழுந்த விபத்தில் இரண்டு பேர் மாயமாகியுள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள மகாநகர் காவல் நிலையம் அருகே, நேற்று இரவு விகாஸ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் சாலையை விட்டு விலகி கோமதி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிட மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காரில் நான்கு பேர் பயணம் செய்த நிலையில், இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள இரண்டு பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் மீட்கப்பட்ட இருவர் துஷ்யந்த் மற்றும் அபிஷேக் என்றும், காணாமல் போன இருவர் ராகுல் மற்றும் மினா என்று லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் சூர்யபால் கங்வார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two missing in car falls in to gomti river in Lucknow Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->