மகாராஷ்ட்ரா: டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ஊர்வலத்தில்... மின்சாரம் தாக்கி இருவர் பலி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியின் போது கொடிக்கம்பம் மின்மாற்றில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று நாடெங்கிலும் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு  மகாராஷ்டிரா மாநிலம் விராட் டவுன் பகுதியில்  பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது வாகனத்தில் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் அங்கிருந்த மின்மாற்றி உரசியதால் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two killed in horror during Dr Ambedkar birthday procession in Maharashtra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->