புதுச்சேரியில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில், பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுவை மாநிலம் 1954-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி விடுதலை பெற்றது. அதனால், ஒவ்வொரு வருடமும் நவம்பர் ஒன்றாம் தேதி புதுவையின் விடுதலை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும், கல்லறை திருநாள் (நாளை) வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதுவை விடுதலை நாளை முன்னிட்டு இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும். ஆனால், இதுவரைக்கும் கல்லறை திருநாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள சுற்றறிக்கையில்," புதுவை விடுதலை நாள் மற்றும், கல்லறை திருநாளை முன்னிட்டு புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days puthuchery schools holiday for independent day


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->