சாலையோரம் கவிழ்ந்த லாரி: மது பாட்டில்களை அள்ளிச் சென்ற குடிமகன்கள்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, அனந்தபூரில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி மது பாட்டில்களை ஏற்றி கொண்டு மதுரவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, முன்னாள் சென்ற லாரியை முந்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 

இதில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறி கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் சிதறி கிடந்த மது பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மது பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்களை அப்புறப்படுத்தி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இதனை அடுத்து மற்றொரு லாரி வரவழைக்க பட்டு மது பாட்டில்கள் அனைத்தும் அதில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. 

மது பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் ஏராளமான குடிமகன்கள் மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

truck overturns people pick up liquor bottles


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->