கொட்டித் தீர்க்கும் கனமழை.. டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தொடர் மழையின் காரணமாக டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடும் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் மிக கனமழை பெய்து வருகிறது.

அதன்படி டெல்லியில் நேற்று 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 153 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் டெல்லியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.‌ மேலும் கன மழை காரணமாக டெல்லியின் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை டெல்லியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow school holiday in Delhi due to heavy rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->