“இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போயிருக்கும்” – மணிப்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சை பேச்சு
The world would have ceased to exist without Hindus RSS chief Mohan Bhagwat controversial speech in Manipur
மணிப்பூரில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கு பிறகு முதல் முறையாக அந்த மாநிலத்திற்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது இந்து மதம் மற்றும் பாரத நாகரீகத்தை பற்றிய கூற்றுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நிகழ்வில் பேசிய அவர், உலக நாகரீக வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஒப்பிட்டு,“கிரீஸ், எகிப்து, ரோம் போன்ற பேரரசுகள் எல்லாம் உலக வரைபடத்தில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் பாரத நாகரீகம் மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்திருக்கிறது. இது நமது மதத்தின், நமது மரபுவழி வாழ்வியல் சக்தியின் காரணம்” என கூறினார்.
அதையே தொடர்ந்து,“இந்துச் சமூகம் ஒருபோதும் அடக்குமுறையை ஆதரித்ததில்லை. இந்து தர்மம் அழிந்துவிட்டால் உலகமும் நிலைநிற்காது. இந்துகள் இல்லையென்றால் உலகமே இல்லாமல் போய்விடும். உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் இந்துச் சமூகம் தான் பாதுகாவலர்”என மோகன் பகவத் வலியுறுத்தினார்.
இதே உரையில், நாட்டின் பொருளாதாரம் பற்றியும் கருத்து தெரிவித்த அவர்,“பாரதம் மிக வலிமையான நாடாக மாற, தற்சார்பு பொருளாதாரம் அவசியம். நமது சமூகத்தின் ஒருமைப்பாடு பல சிக்கல்களை கடந்துள்ளது. நக்சல் பிரச்சினைகள் போன்றவற்றை நாம் எதிர்த்து வென்றுள்ளோம். அப்படிப்பட்ட மனநிலைதான் சுதந்திரப் போராட்டத்திலும் இருந்தது”
என்று கூறினார்.
மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு மோகன் பகவத் கூறிய இந்த கருத்துகள், நாடு முழுவதும் அரசியல் மற்றும் சமூகவியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
English Summary
The world would have ceased to exist without Hindus RSS chief Mohan Bhagwat controversial speech in Manipur