மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’; காங்கிரஸ் வலியுறுத்தல்!
The Modi government must seek forgiveness Congress insists
மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் காங்கிரஸ் சாட்டியுள்ளது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் இன்று அமலுக்கு வந்ததையட்டி பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த சீர்திருத்தத்தை ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா என பிரதமர் வர்ணித்தார். இதையடுத்து மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கூறியிருப்பதாவது:‘ கடந்த 8 ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூலித்தது. தற்போது ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு திருவிழா குறித்து பேசுகிறீர்கள். மக்களுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்திய பிறகு ஒரு எளிய கட்டு போடுகிறீர்கள்’ என சாடியுள்ளார்.
மேலும் அவர், ‘மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதற்காக உங்கள் அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:‘ஜி.எஸ்.டி அமலான 2017 ஜூலை மாதம் முதலே ஜி.எஸ்.டி. 2.0-க்கு நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போதைய ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் போதுமானதல்ல. பொருளாதாரத்தில் முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளின் பரவலான கவலைகள் உள்பட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன’ என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இந்தியா-அமெரிக்கா உறவுச்சிக்கல், லட்சக்கணக்கான எச்1-பி விசாதாரர்களின் கவலைகள், அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 42-வது முறையாக டிரம்ப் கூறியிருப்பது குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றுவாரா? என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
English Summary
The Modi government must seek forgiveness Congress insists