குரானை அவமதிக்கும் விதமாக தெருவில் தூக்கி வீசிய நபர்.. போலீசார் அதிரடி கைது கைது!
The man insulted the Quran and threw it on the street police arrested
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவர் குரானை தண்ணீரில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கோஜ்வாடா பகுதியில் உள்ள முஸ்லிம் நபர் ஒருவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தெருவில் உள்ள மழை நீரில் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அகமது மிர் இரவோடு இரவாக போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசார் தெரிவித்த தகவலின் படி குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை புண்படுத்துவது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. திருக்குரானின் புனித தன்மை அவமதித்ததன் காரணமாக மதநல்லிணக்கம் மற்றும் அமைதி சீர்குலைவை ஏற்படும் அபாயம் உள்ளது.
திருக்குரானை அவமதித்ததால் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. எனவே திருக்குரானை புண்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்
English Summary
The man insulted the Quran and threw it on the street police arrested