ஏழ்மையான மாநிலங்களின் பட்டியல் வெளியீடு.. தமிழகத்திற்கு இந்த இடமா?..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலை நிதி அயோக் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் ஏழ்மை நிலை குறித்து நிதி அயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு ஆண்டுகள்,கல்வி மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய 12அம்சங்களில்  அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பீகார் மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 42.16 % ஜார்ஜ்கண்ட் மாநிலமும் 37.79 % உத்தரபிரேதசமும் அடுத்த இடம் பிடித்துள்ளன. மேகாலையாவில் உள்ள மக்களில் 32.67 சதவீதம் பேர் வறுமையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி சிக்கிம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை குறியீடு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த அறிக்கையில், கேரளா 0.71 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாகவும் தமிழகத்தில் 4. 89 சதவீத மக்கள் வறுமையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The list of poorest states was published by the Finance Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->