"வீட்டை விட்டு வெளியே வந்தா, உயிருக்கு உத்திரவாதம் இல்லை" - படக்குழுவிற்கு கொலைமிரட்டல்! - Seithipunal
Seithipunal


"வீட்டை விட்டு வெளியே வந்தா, உயிருக்கு உத்திரவாதம் இல்லை" என்று, கேரளா ஸ்டோரி பட க்குழுவை சேர்ந்தவர்க்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி நாடு முழுவதும் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. கேரள மாநிலத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளம் பெண்களை மூளை சலவை செய்து, நாடகக் காதலில் வீழ்த்தி, அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து, நாடு கடத்தி தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் மையக்கரு அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இது வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் மீது கட்டமைக்கப்படும் பொய் குற்றச்சாட்டு. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்த நிலையில், கேரளா ஸ்டோரி படத்தின் குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் வந்து உள்ளதாக, படத்தின் இயக்குனர் மும்பை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரின் அந்த புகாரில், எங்கள் பட குழுவை சேர்ந்த ஒருவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. 'நீங்கள் வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால், மீண்டும் வீடு போய் சேர முடியாது' என்று மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த புகாரில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படக்குழுவை சேர்ந்த அந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Kerala Story Mumbai Police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->