ஆந்திராவில் 3 லட்சம் கொடுத்து சண்டை சேவல் வாங்கிய தாய்லந்து நாட்டினர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் 3 லட்சம் கொடுத்து சண்டை சேவல் வாங்கிய தாய்லந்து நாட்டினர்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 

இந்த போட்டிக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன. மேலும் அந்த சேவல்களுக்கு தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவை கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர். 

இந்த நிலையில் ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்கள் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பார்த்து வாங்க தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதிக்கு வந்தனர்.

அதன் படி அவர்கள் அனைவரும் ரங்காபுரம் என்னும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும் ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து பந்தய சேவல்களை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து சேவல் உரிமையாளர் ரத்தைய்யா கூறியதாவது, "கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடைபெற்ற பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என்னிடம் வந்து ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்கு கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thailand peoples buy fighting cock in andira


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->