திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்.? உயர் பாதுகாப்பு பணியில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


திருப்பதி திருமலையில், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு உயர் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதில் பக்தர்கள் பேருந்து மற்றும் படிக்கட்டு வழியாக மலையேறி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அதன் காரணமாக பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி மலையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக திருப்பதி போலீசாருக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் ஆகியோருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பதி மலை முழுவதும் உயர்பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorist threat email in thirupathi temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->