தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள்.... தொலைத்தொடர்பு அமைச்சர் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


சர்வதேச எண்கள் கொண்ட ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகளால் மக்கள் பணம் இழக்கும் அபாயங்கள் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் தெரியாத எண்களிலிருந்து வரும் மொபைல் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய தொலைதொடர்பு அமைச்சர், தெரியாத எண்களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் அவர்கள் அங்கீகரிக்கும் எண்களில் இருந்து மட்டுமே வரும் அழைப்புகளை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணைய மோசடிகளைத் தடுக்க தகவல் தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் 'சஞ்சார் சாதி' போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதில் 40 லட்சத்திற்கும் அதிகமான தவறான சிம்கள் மற்றும் 41,000 தவறான விற்பனை முகவர்கள் கண்டறியப்பட்டு தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telecom minister warns about call from unknown numbers


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->