தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு! அதிர்ச்சி மருத்துவ அறிக்கை! - Seithipunal
Seithipunal



தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தனது வீட்டில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

69 வயதான இவர் தடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும், மேலும் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் கே. சந்திரசேகர ராவ் தற்போதைய உடல்நிலை குறித்து, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனை அறிக்கையில், சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 முதல் 8 வாரங்கள் சிகிச்சை இருக்கும் என்றும், தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் வெளியான அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana K ChandraShekhar Rao MEDICAL REPORT


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->