இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. தற்போது வைரஸ் தொற்று குறையாத காரணத்தால் மேலும் இரண்டு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவப்பு மண்டலங்களுக்கு தனி கட்டுப்பாடும், ஆரஞ்சு நிற மண்டலங்களுக்கு தனி கட்டுப்பாடும், பச்சைநிற மாநிலங்களுக்கு தனி கட்டுப்போடும் மத்திய அரசு விதித்துள்ளது. பச்சைநிற மண்டலத்தில் பல கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சிவப்பு மண்டல பகுதியில் பகுதிகளில் மதுக்கடைகள் திறப்படாது என கலால் துறை அமைச்சர் ராகேஷ் தெரிவித்து உள்ளார். மேலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மதுக்கடை திறப்பதன் எதிரொலி, மாநில எல்லைகளில் கர்நாடக காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac open to karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->